Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்தவரின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த திமுகவினர்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இறந்த முதியவரின் உடலை பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமம் திமுக சட்டமன்ற உறுப்பினர்   கேகேஎஸ்எஸ்ஆர் இன் சொந்த ஊராகும். இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை  சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை மயானத்தில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் ஆதரவாளர்கள் அவ்வழியே இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல கூடாது எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மயானத்திற்கு செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் முதியவரின் உடலை எடுத்துச்செல்ல இடையூறு செய்யாமல் கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் மறியலை கைவிட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இறந்த முதியவரின் உடல் அவ்வழியே கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |