Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்ய கூடாது…. இருதரப்பினர் இடையே வாக்குவாதம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

இறந்தவரின் உடலை ஓடை புறம்போக்கு நிலத்தில் புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் தாயனூர் கிராமத்தில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு யாராவது இறந்து விட்டால் அவரது உடலை பொதுமக்கள் ஊருக்கு வெளியே இருக்கும் ஓடை புறம்போக்கு இடத்தில் அடக்கம் செய்து வந்துள்ளனர். அதன்பின் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நீரோடையில் உடலை புதைக்கக் கூடாது என்பதைக் கருதி சுடுகாட்டுக்கு அரசு சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த சுடுகாட்டில் 10-க்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறது. பின்னர் தாயனூர் பகுதியில் வசிக்கும் குப்புசாமி என்பவர் உடல்நிலை பாதிப்பால் இயற்கை மரணம் அடைந்துள்ளார். பின் அவரது உடலை அடக்கம் செய்ய பழைய சுடுகாடாக ஓடை புறம்போக்கு இடத்தில் குழி வெட்டி உள்ளனர். இதனால் ஊர் பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்ய தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஓடை புறம்போக்கு இடத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சுடுகாட்டில் அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டு இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |