ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை சரமாரியாக சுட்டனர். அப்போது அந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த தலைவர் உள்பட 7 கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.