தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர்.
இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்து, குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் விக்கி, நயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு நடிகை காஜல் அகர்வால், நயனுக்கும் விக்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோர்கள் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் வாழ்வில் சிறந்த பகுதியாக இது இருக்கும். உயிர், உலகத்திற்கு எனது அன்பும் ஆசீர்வாதங்களும் என்று பதிவிட்டுள்ளார். அதனைப் போல அட்லி, அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பிரபலங்கள் விக்கி நயன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.