இரவு நேரங்களில் சில விஷியங்களை செய்வதனால் சருமம் பொலிவடையும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளலாம்.
சருமம் பளபளப்பாக இருப்பதற்கு முறையான பராமரிப்புக்களை பின்பற்றினால் போதும், பொலிவு நிறைந்த அழகை பெறலாம். முக்கியமாக இரவு தூங்க செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும பொலிவை தரும். அதற்கு காரணம் என்னவென்றால் இரவில் முகத்தில் உள்ள சரும துகள்கள் விரிந்து சுவாசம் பெரும். அந்த நேரத்தில் நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூடுதலான பலனை நமக்கு அளிக்கும்.
முகம் கழுவுதல்:
முதலில் உங்களின் முகத்தை சோப்பினால் கழுவாமல் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றை நீங்கிவிடும். அத்துடன் சருமம் பொலிவாகும்.
சீரம் :
சருமத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமம் இல்லாமல் தவிர்த்துவிடலாம். இதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் ஆகியவற்றை பயன்படுத்தி முகத்தில் இரவு நேரங்களில் மசாஜ் போன்று செய்யுங்கள்.
நைட் கிரீம் :
நாம் முகத்தில் மசாஜ் செய்திருக்கும் சீரத்தை சருமம் உள்ளிழுத்த பிறகு நைட் கிரீம் பயன்படுத்தி கொள்ளலாம். காலையில் எழுந்ததும் முகத்தை பாருங்கள் பொலிவாக இருக்கும். சோர்வாக தோற்றமளிக்கும் சருமத்தை புத்துணர்ச்சியோடு பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்களுக்கு உண்டு.
இப்பொழுது சொன்ன விஷியங்களை செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை என்றால், முகத்தை அடிக்கடி கழுவுவதை மட்டும் தவறாமல் கடைபிடியுங்கள். அதுவும் சருமத்திற்கு போதுமானதாகும்.