இந்தியாவின் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் சில விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு விடும்.
ஆனால் ரயில் டிக்கெட் புக்கிங் ஆகாது. அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பீர்கள்.இது குறித்த ஐ ஆர் சி டி சி விதிமுறை என்னவென்றால் டிக்கெட் கட்டணத்திற்கு முழு தொகையையும் உங்களுடைய கணக்கில் ரீபண்ட் செய்யப்பட்டு விடும். மேலும் டிக்கெட் புக்கிங் செய்து அது கன்பார்ம் ஆகிவிட்டால் அதற்கான கேன்சல் ரீபண்ட் வெவ்வேறு அளவில் இருக்கிறது. அதாவது கேன்சல் செய்யும் நேரம் மற்றும் பெட்டியின் வகையை பொறுத்து ரீபண்ட் தொகை பயணிகளுக்கு மாறுபடும். அதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால்,
ஏசி பர்ஸ்ட் / எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் = ரூ.240 மற்றும் ஜிஎஸ்டி
ஃபர்ஸ்ட் கிளாஸ் / ஏசி 2 டைடர் = ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி
ஏசி சேர் கார் / ஏசு 3 டையர் / ஏசி 3 எகானமி = ரூ.180 மற்றும் ஜிஎஸ்டி
ஸ்லீப்பர் கிளாஸ் = ரூ.120
செகேண்ட் கிளாஸ் = ரூ.60
ஒருவேளை ரயில் புறப்படுவதற்கு முன்னர் 24 மணி நேரம் முதல் 12 மணி நேர இடைவெளியில் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் கட்டணத்திலிருந்து 25 சதவீதமும் ஜிஎஸ்டியும் சேர்த்து பிடித்தம் செய்யப்படும். மேலும் 12 மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரையில் டிக்கெட் கேன்சல் செய்தால் 50 சதவீத டிக்கெட் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகை போக எஞ்சிய பணம் உங்களது கணக்கில் வந்து சேரும். மேலும் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரீபண்ட் எதுவும் உங்களுக்கு கிடைக்காது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.