Categories
அரசியல்

IRCTC-யின் அசத்தல் அறிவிப்பு….. ஆதார் இணைப்பது எப்படி….? இதோ எளிய வழிமுறை…!!!!

ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். (முன்பு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்) இதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இந்த அறிவிப்பு அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்று (irctc.co.in) “My Account” சென்று “Aadhar KYC”  என்பதை கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு “Send OTP” என கிளிக் செய்யவும். மொபைலுக்கு வரும் “OTP” யை பதிவிட்டு “Verify” யை க்ளிக் செய்யவும். இதனையடுத்து KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டதாக உங்கள் செல்போன் நம்பருக்கு செய்தி வரும். இதன்பிறகு டிக்கெட் புக்கிங்க் செய்வது எளிதாக இருக்கும்.

Categories

Tech |