Categories
மாநில செய்திகள்

IRCTC: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா?… எப்படி தெரிந்துகொள்வது?…. இதோ முழு விபரம்…..!!!!

தினசரி 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பற்றிய பிரச்சனைகளை மக்கள் அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கிறது. எனினும் பயணிகள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் அடிப்படையில், ரயில்வே வாயிலாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஆர்சிடிசி ஆப் (IRCTC APP) (அல்லது) இணையதளத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கையானது இரட்டிப்பாக்கி உள்ளது. ஆனால் இந்த வசதிகளுக்குப் பின்பும்  உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுக்காக ரயில்வே பயணிகள் போராட வேண்டி இருக்கிறது.

அதாவது நீண்ட தொலைவு போகும் (அல்லது) மிகவும் பிரபலமான ரயில்களில் கன்பார்ம் டிக்கெட்டுகள் விரைவாக கிடைக்காது. இதற்கென அந்த ரயில்களில் டிக்கெட்டுகளின் முன்பதிவு ஒருசில மாதங்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டும். இருந்தாலும் நீங்கள் தட்கலிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்காக நீங்கள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றொருபுறம் உங்களது டிக்கெட் உறுதிப்படுத்தப்படுமா..? இல்லையா..? என்பது முன்பே தெரிந்திருந்தால் பயணத்திற்கான மற்றொரு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். அதற்கு பிரத்யேகமான சில வழிகள் இருக்கின்றன. இதனைப் பின்பற்றி முன்கூட்டியே உங்களின் ரயில் டிக்கெட் கன்பார்ம் நிலவரத்தை அறிந்துகொள்ள இயலும்.

எவ்வாறு தெரிந்து கொள்வது..?

# வெயிட்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆகுமா..? இல்லையா..? என்பதை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், உங்களிடம் ஸ்மார்ட்போன் (அல்லது) லேப்டாப் இருத்தல் வேண்டும்.

# அவை இருக்கும் பட்சத்தில் முதலாவதாக irctc.co.in/nget/train என்ற வலைதள பக்கத்திற்கு செல்லவும்.

# அவற்றில் வழக்கம்போல் லாகின் (Login) செய்ய வேண்டும். ஒருவேளை புதியவராக இருந்தால் ஐ.ஆர்.சி-டியில் புது கணக்கு ஒன்றை உருவாக்கவும்.

# தற்போது Train மற்றும் PNR Enquiry விருப்பத்தை கிளிக்செய்யவும்.

#அதன்பின் PNR எண்ணை உள்ளிடவும்.

# அடுத்து ​​”Click here to get confirmation chance” என்ற ஆப்சனை  தேர்ந்தெடுக்கவும்.

# தற்போது ஒரு புது பாப்அப் விண்டோ உங்கள் முன் திறக்கும், அது உங்கள் காத்திருப்பு டிக்கெட் உறுதிசெய்யப்பட வாய்ப்புள்ளதா..? இல்லையா? என்பதைக் காட்டும்.

Categories

Tech |