ஜிம்பாப்வே -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாவே அணி 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் மைதானத்தில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் குவித்தது.
இதில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் சகாப்வா 47 ரன்கள் குவித்தார். இதன்பிறகு அயர்லாந்து அணி களமிறங்கியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் குவித்து தோல்வியை சந்தித்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே என்ற கணக்கில் 1-0 தொடரில் முன்னிலை உள்ளது.