இந்திய அணியின் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
2003 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கியவர் 35 வயதான இர்பான் பதான். ஆல்ரவுண்டரான இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டியில் விளையாடி 28 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல உறுதுணையாக இர்பான் பதான் இருந்துள்ளார். அதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பதான் அறிவித்துள்ளார்.
இர்பான் பதான் ஓய்வை அறிவித்த பின் பேசியதாவது ; சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் போன்றோருடன் விளையாடியது என் அதிர்ஷ்டம் என்றார். தற்போது இர்பான் பதான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா என்ற தமிழ் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.