Categories
அரசியல்

“இந்தியாவின் இரும்பு மனிதர்”…. சர்தார் வல்லபாய் படேலின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவருடைய சிலை நர்மதை ஆற்றின் கரையோரம் 597 அடியில் அமைக்கபட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜவேரி பாய் படேல்-லாட்பா தம்பதியினருக்கு படேல் மகனாக பிறந்தார். இவருக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. தன்னுடைய 22 வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்ற வல்லபாய் படேல், 25 வயதில் டிஸ்ட்ரிக்ட் பிளீடர் படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியில் அமர்ந்தார். தன்னுடைய 18 வயதில் 12 வயது நிரம்பிய ஜவேர்பா என்ற பெண்ணை திருமணம் செய்த வல்லபாய் படேல், லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்கு திரும்பினார்.

மகாத்மா காந்தியுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக சர்தார் வல்லபாய் படேல் குரல் கொடுத்தார். ஆங்கிலேயே அரசுக்கு எதிராக வரியை ரத்து செய்ய போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக வரிக்கொடாமை போராட்டம் நடத்திய வல்லபாய் படேல் அதில் வெற்றியும் பெற்றார். கடந்த 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய வல்லபாய் படேல் அது பற்றிய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்திஜி கைது செய்யப்பட்டதால் இயக்கத்தை தலைமை தாங்கும் பொறுப்பு வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டதால் அவரின் புகழ் இந்தியா முழுதும் பரவியது.

கடந்த 1930-ம் ஆண்டு சத்தியாகிரக போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வல்லபாய் படேல் மூன்று மாதத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். மகாத்மா காந்திஜிக்கு மிகவும் நம்பிக்கையான மற்றும் நெருக்கமானவராக வல்லபாய் படேல் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜவர்கலால் நேரு பிரதமராக பதவியேற்ற பிறகு, துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் வல்லபாய் படேல் பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தில் பல இடங்களில் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், பொறுப்பேற்ற 2 வருடங்களில் நாடு  முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார் படேல்.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் ஆட்சியில் இருக்கும் போது முக்கியமான இரண்டு பொறுப்புகளை உருவாக்கினார். அதாவது ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் பதவிகளை உருவாக்கியவர் வல்லபாய் படேல் தான். இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய இரும்பு மனிதர் வல்லபாய் படேல் கடந்த 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி தன்னுடைய 75-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் தன்னுடைய இரும்பு கரங்களால் இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக போராடிய வல்லபாய் படையல் மறைந்தாலும் அவருடைய புகழ் இரும்பு மனிதர்களாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

Categories

Tech |