Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி ஏற்றுமதி விவகாரம்”… எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன்… மிரட்டலில் பின்வாங்கிய ஐரோப்பிய ஒன்றியம்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி விவகாரத்தில் பிரிட்டனுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கடந்த சில நாட்களுக்கு முன்பு, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பிரிட்டனுக்கு மட்டும் அதிகளவு ஏற்றுமதி செய்வதால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியையும் தடை செய்து விடுவோம் ” என்று மிரட்டினார். இதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும்  ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் மற்றொரு பக்கம் அயர்லாந்து இது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கை என்று விமர்சித்தது. மேலும் பின்லாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து  போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர், ” மக்களின் உயிரை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற கூடிய தடுப்பூசி விநியோகத்தை தடுப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவப்பெயர் தான் கிடைக்கும்.

மேலும் சர்வதேச நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலீடு செய்யும் போதும் தடைபடும்” என்று எச்சரித்தார் . இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் எச்சரிக்கையையை கருத்தில் கொண்டு ஒரு முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவு என்ன தெரியுமா? அனைவரும் பயனடையும்  வகையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி பிரச்சனையில் தீர்வு காண பிரிட்டனுடன் சேர்ந்து அறிவிப்பு  வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது.

Categories

Tech |