ஆளும் பாரதிய ஜனதா அரசின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற ஆட்சியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று மாயாவதி விமர்சித்துள்ளார்.
நேற்று நவம்பர் 8_ஆம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புக் கொண்ட ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3_ஆம் ஆண்டு ஆகும். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மோடியில் இந்த முடிவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதே போல தற்போது நடைபெறும் பொருளாதார மந்தத்திற்கு மோடியின் இந்த அறிவிப்பு காரணம் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மக்களுக்கு பாதிப்பை கொடுத்துள்ளது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், “கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளும் பாரதிய ஜனதா அரசின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற ஆட்சியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.