ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலவர் அறிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பவானிசாகர் ஏரியிலும் நீர் திறக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.