Categories
உலக செய்திகள்

‘நெருப்புடன் விளையாடுகிறார்கள்’…. காணொளியில் கலந்துரையாடல்…. சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தி….!!

காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாட்டு அதிபர்களும் உரையாற்றினார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அதிகாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதிலும் வணிகம், மனித உரிமைகள், தென்சீனக்கடல் பிரச்சனை, தைவான் போன்ற பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இது இரு அமர்வுகளாக சுமார் மூன்றரை மணி நேரம் நடந்தது. இதில் அதிபர் ஷி ஜின்பிங் கூறியதை சீன அரசு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில் ‘இரு நாடுகளும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். அமைதியுடன் சேர்ந்து வாழ வேண்டும். இருவரும் மனதார ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக தயாராக இருக்கிறேன். இதனை தொடர்ந்து தைவான் சுதந்திர நாட்டிற்காக அமெரிக்காவின் ஆதரவை நாடி வருகிறது. அதிலும் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா தைவானை பயன்படுத்துவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்.

மேலும் நெருப்புடன் விளையாடுபவர்களுக்கு காயம் ஏற்படும்’ என்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான ஜனநாயகம் இருப்பதில்லை. ஒரு நாடு ஜனநாயகமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அந்நாட்டு மக்களின் கைகளில் விட்டுவிட வேண்டும். ஒருவரின் ஜனநாயகத்திலிருந்து வேறுபடும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பது ஜனநாயகமற்றது. மேலும் மரியாதையின் அடிப்படையில் மனித உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.

இருப்பினும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மனித உரிமைகளை பயன்படுத்தும் செயலை நாங்கள் எதிர்க்கிறோம். குறிப்பாக சீனா எப்பொழுதும் ஒரு அமைதி விரும்பி. மேலும் பிற நாடுகளின் இடத்திற்கு உரிமைக்கோர விருப்பமில்லை’ என்று அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில் அளித்துள்ளார். இதற்கு அமெரிக்கா அதிபர் பதிலளித்ததில்  ‘தைவானின் நிலையை மாற்றவோ அல்லது அதன் அமைதியை சீர்குலைக்கும் முறையில் எடுக்கப்படும் முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான போட்டியானது மோதலாக மாறக்கூடாது’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆலோசனையானது அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அவருக்கும் சீன அதிபருக்கும் இடையே நடந்த முதல் காணொளி உரையாடலாகும். மேலும் இரு அதிபர்களும் உரையாடலின் துவக்கத்தில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். அதிலும் தனது பழைய தோழரை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று சீன அதிபர் கூறியுள்ளார்.

Categories

Tech |