அமெரிக்கா அதிபர் மற்றும் இந்தியா பிரதமர் இருவரும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசியுள்ளனர்.
இந்தியா நாட்டின் பிரதமரான மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபரான ஜோ பைடனை சந்தித்து நெடு நேர ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையின் போது இருநாட்டு தலைவர்களும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததில் “இந்தியா அடுத்த வாரத்தில் அகிம்சையின் மறுவுருவமான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடவுள்ளது. காந்தியின் அகிம்சை, பொறுமை, நன்னடத்தை போன்ற அனைத்துப் பண்புகளும் எக்காலத்திற்கும் ஏற்றதாகும். அதிலும் உலகில் வளம் படைத்தவர்களின் செயலானது மனித சமுதாயத்திற்கு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார்.
மேலும் வணிகத்தில் மூலதனத்தை விட தொழிலாளர்களே நிலையானவர்கள் என்று உறுதியாக நம்பினார். மேலும் தேசப்பிதா குறித்து அதிபர் ஜோ பைடனும் கூறிய போது ‘காந்தியின் கொள்கையின்படி இரு நாட்டு உறவுகளும் முன்னே உயரும். நானும் அவரின் கருத்தை நானும் உளமார ஏற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.