இரு பெண்களை படுகொலை செய்த வழக்கில் 67 வயதான முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கென்ட் கவுன்டியில் Tunbridge Wells நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வென்டி மற்றும் கரோலின் என்ற இரு இளம் பெண்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்டனர். குறிப்பாக இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முன் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் இருவரும் நகரத்தின் மையத்தில் ஒரே தெருவில் வேலை பார்த்துள்ளனர். இந்த இரண்டு படுகொலைகளுமே ‘Bedsit Murder’ என்றழைக்கப்படுகிறது.
அதிலும் கடை மேலாளராக இருந்த 25 வயதான வென்டி 1987 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று கில்ட்ஃபோர்ட் சாலையில் உள்ள தரை தளத்தில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக பேருந்து ஓட்டுனரான தனது காதலருடன் இரவு பொழுதை கழித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கரோலின் என்ற பெண் அவரின் வீட்டிற்கு அருகில் உள்ள என்ற பூங்காவில் அவனது வீட்டிற்கு அருகிலுள்ள க்ரோஸ்வெனர் பூங்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இறுதியாக நவம்பர் 24 ஆம் தேதி இரவு அன்று ஒரு டாக்சியில் இருந்து இறங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இறக்கும் பொழுது இரண்டு பெண்களும் கையில் ஏதோ சாவி வைத்திருந்ததாகவும் அது அவர்கள் சடலமாக மீட்கப்பட்ட போது கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த இரு பெண்களையும் செய்ததாக கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்ட் பகுதியில் உள்ள 67 வயதான டேவிட் ஃபுல்லரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று Maidstone Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது டேவிட் புல்லரிடம் விசாரிக்கப்பட்டது. குறிப்பாக அவர் கொலை செய்தததை ஒத்துக்கொள்வதாக கூறிய நிலையில் நீதிமன்றத்தில் மறுத்துவிட்டார். இதனால் விசாரணையானது மீண்டும் அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் டேவிட் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.