Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சமாதானம் செய்ய முயன்ற சக பயணிகள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அலம்பலம் கிராமம் மற்றும் பொன்பரப்பட்டு கிராமம் என இரு கிராமங்களில் வசிக்கும் மாணவர்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது வழியில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதைப் பார்த்த சக பயணிகள் சமாதனம் செய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையம் முன்பு கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். பின்னர் காவல்துறையினர் இரு தரப்பு மாணவர்களையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றம் நிலவி வருகின்ற காரணத்தால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |