இருசக்கர வாகனத்தை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் ஆபிரகாம் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் லிங்கன் தூத்துக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது ராதாகிருஷ்ணன் மற்றும் அருண்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.