Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முன்விரோதம் காரணமாக…. இருளர் இன சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. 3 மாணவர்கள் மீது நடவடிக்கை….!!

இருளர் இன சிறுவனை அவனுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தீயில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காட்டுசிவிரி அண்ணா நகர் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு சுந்தரராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் காட்டுசிவிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சுந்தரராஜனை அவனுடன் படிக்கும் சில மாணவர்கள் சாதி பெயரை கூறி அழைத்து வந்தனர். இதனால் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் காட்டுசிவிரியில் உள்ள கருமகாரிய கொட்டகை அருகில் குப்பைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சுந்தரராஜனை 3 மாணவர்கள் வழிமறித்து திடீரென தீயில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் சுந்தரராஜன் வலியால் அலறி துடித்தான். இதனையடுத்து சுந்தரராஜன் அருகில் தேங்கி கிடந்த தண்ணீரில் படுத்து, உருண்டு தீயை அணைத்துள்ளான். அதன் பின் தீக்காயங்களுடன் வீட்டிற்கு ஓடி சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதான்.  இதனை கேட்டு பதறிப்போன கன்னியப்பன் உடனடியாக சுந்தரராஜனை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு மருத்துவர்கள் அவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகல்விமணி மற்றும் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் ஆகியோர் சிறுவன் சுந்தரராஜனை நேரில் சென்று பார்வையிட்டு அவனது தந்தை கன்னியப்பன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |