வங்காள தேசத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தில் நேற்று மின்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 13 மில்லியன் மக்கள் இன்று பிற்பகல் முதல் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக மின்வாரியம் கூறியிருக்கிறது. இது குறித்து மின்சாரம் மேம்பாட்டு வாரியம் கூறியதாவது “வங்காளதேசத்தின் நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் நாட்டினுடைய 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்தடைக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறுதான். மேலும் தலைநகர் டாக்காவில் சுமார் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இரவு 8 மணிக்கு மின்சாரம் சீராக வரும்” என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வரை மின்விநியோகம் சரிவர இல்லை என கூறப்படுகிறது.