Categories
அரசியல் மாநில செய்திகள்

இருமா.. உனக்காக தான் பேசீட்டு இருக்கேன்.. நீ பேசுறியா.. நான் பேசவா..?? கோபமடைந்த Sellur Raju..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த அரசுக்கு விளம்பரம் தான் முக்கியம். பேருந்தில் முழுமையாக கலர் அடித்தால் தான், வயதான பெண்களுக்கு தெரியும். முன்னாள் கலர் அடித்து விட்டால், எப்படி ? பஸ்ஸ முன்னாலே பார்த்துக் கொண்டேவா இருக்க முடியும். வயசான தாய்மார்களுக்கு எப்படி தெரியும்?

நம்ம முதலமைச்சர் கொடுத்த இலவச பேருந்து வருகின்றது.  அதில,  போகலாம் என்றால்…. அதுல எப்படி ஏறும் ? முன் பக்கம் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகிறது? செய்வதை திருந்த செய்ய வேண்டும். தமிழக அரசு தான் இந்தியாவுக்கே முதன்மையான அரசு என்று சொல்கிறார்கள். எந்த வகையில் முதன்மையான அரசு ? வரும்போதே மக்கள் படும் கஷ்ட குரல் கேட்டது.

மக்களுக்கு இது தருகின்றேன். அது தருகின்றேன் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வீட்டு வரி உயர்வை செய்ய மாட்டோம்; பொருளாதாரத்தை மேம்படுத்த பிறகு தான் செய்வோம் என தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதை மீறி இன்னைக்கு வீட்டு வரியை உயர்வு செய்கிறார்கள் என்று அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே…

அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி இரண்டு முறை குறுக்கிட்டு, வீட்டு வரி உயர்த்திட்டாங்கன்னு சொல்லும்போது…செல்லூர் ராஜீ, இருமா உனக்காக தான் பேசிட்டு இருக்கேன்; நீ பேசுறியா ? நான் பேசவா என்று கோபமடைந்து பேசினார்.செல்லூர் ராஜீ கோபமடைவதை சுதாரித்துக் கொண்ட அருகில் இருந்தவர்… ”கொஞ்சம் பொறுங்க” என சொல்ல,செல்லூர் ராஜீ நிதானத்துக்கு வந்து பேசினார்.

Categories

Tech |