காஞ்சிபுரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகனை கொலை செய்து இருசக்கர வாகனத்தில் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிசாம்சன். இவரது இளைய மகன் எலியா பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பகுதி நேரமாக தேவாலயங்களில் பாடல்கள் பாடி வந்துள்ளார். இந்நிலையில் செம்பரம்பாக்கத்தில் உறவினர் ராமு என்பவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முடித்துவிட்டு ஏலியன் வீடு திரும்பினார்.
அப்போது சிறு காவேரிபாக்கம் பகுதியில் மர்ம நபர்கள் எலியாவை மரித்து இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்