சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.