இருசக்கர வாகனம் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன்,அலமேலு இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியப்பன் உயிரிழந்துவிட்டார். மேலும் காலில் பலத்த அடிபட்ட அலமேலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.