ஏ.டி.எம் வெளியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் இருக்கும் ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அந்த மர்ம நபரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
பின்னர் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மர்மநபர் பழைய ஒயின் ஷாப் அருகில் சென்று கொண்டிருக்கும் போது காவல்துறையினர் வருவதை கண்டு பீதியடைந்து இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.