இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முகையூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வயல்வெளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சுப்பிரமணியன் என்பவரின் வயல்வெளி அருகாமையில் வந்த நிலையில் முருகன் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.