தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க்கின் வீரர் ஆக்செல்சனின் பேட் உடைந்த பிறகும் அவர் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டென்மார்க்கை சேர்ந்த ஆக்செல்சன் விளையாடினார். அவரை எதிர்த்து தைவானின் சௌ டீன் சென் விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஆட்டத்தை 21- 16 என்ற கணக்கில் செட்டை ஆக்செல்சன் கைப்பற்றினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆக்செல்சன் இரண்டாவது செட்டை கைப்பற்ற முயன்ற போது அவரது பேட் உடைந்தது. இருப்பினும் அவர் இரண்டாவது செட்டையும் 21 – 15 என்ற கணக்கில் கைப்பற்றி தைவானின் டென்னிஸ் வீரர் சௌ டீன் சென்-னை அதிரடியாக வீழ்த்தினார். இதனால் ஆக்செல்சன் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.