Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்… இறுதியில் தெரிந்த வந்த உண்மை…கால்நடை மருத்துவர்களின் தகவல்…!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் நிமோனியாவால்  பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 40 ஆடுகள் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து  காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதித்துள்ளனர். இதில் ஆடுகளுக்கு நிமோனியா சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் ஆடுகள் நிமோனியா நோயினால் தான் இறந்துள்ளன என்பது தெரியவந்தது. இதனால் ஆடுகள் இறப்பதன் காரணம் என்ன என்று தெரியாமல் இருந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Categories

Tech |