கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. 2018-ஆம் வெளியான இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பாலசரவணன், மதுமிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இரட்டை பொருள்படும் வசனங்கள், கவர்ச்சிக் காட்சிகள் என அடல்ட் காமெடி படமாக அமைந்திருந்து. படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்.
முற்றிலும் புதிய நடிகர்கள், கதையம்சத்துடன் அடுத்த பாகத்தை உருவாக்கவுள்ளாராம். ஃபேண்டஸி பாணியில் முதல் பாகத்தை விட முற்றிலும் குறும்புத்தனம் நிறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தை 2020 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.