செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த ரெண்டும் கண்டிப்பா நடக்கும்.
முதல்வர் முக.ஸ்டாலின், எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதுகிறார். உடன்பிறப்பே கஞ்சா, போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றால், யார் கஞ்சா வச்சிருக்கா? எம்எல்ஏக்கள் கஞ்சா வைத்திருக்கிறார்களா ? அவரே சொல்லாம சொல்லுறாரு, தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கஞ்ச கடத்துறாங்கன்னு சொல்லாம சொல்றாரு.
அமமுக பொதுக்குழு நடத்திகிடக்கும். அதாவது சிறப்பு அழைப்பாளராக *ஓபிஎஸ் அவர்களை கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். அது மாதிரி சசிகலாவை கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். அதுல அப்படியே போயிட்டா நல்லது தான். எங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல்.. கூட்டணி குறித்து முடிவு செய்வது கட்சி. கட்சியினுடைய இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியார் இருக்கிறார். அவர் தலைமையில இன்னைக்கு கட்சி இயங்கிக்கிட்டு இருக்கு எதுவாக இருந்தாலும் கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.