Categories
சினிமா தமிழ் சினிமா

வீராங்கனை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாரா…? கிடைத்தது பதில்…!!

பிரபல தடகள வீராங்கனையின் வாழ்க்கை படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாரா என்பதற்கு விளக்கம் கிடைத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் பலம் வாய்ந்த தடகள பெண் வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் பெண்ணாகவும் இவர் திகழ்கிறார். அதன்பிறகு ஆசியாவில் நடைபெற்ற பாலின சோதனையில் இவர் தோல்வியுற்றதால் இவரிடமிருந்து பதக்கங்கள் திரும்பப்பெறபட்டது.

இந்நிலையில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சௌந்தர்ராஜனின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தில் சாந்தியின் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் பி.ஆர்.ஓ, ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |