Categories
அரசியல்

”மது , சாராயம் எல்லாம் புனித நீரா ? சீமான் கேள்வி…!!

குட்கா மட்டும் தான் போதையா மது , சாராயம் எல்லாம் புனித நீரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதிப் போராளி இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் போது , குட்கா போதை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சீமான் குட்கா போதை பொருள் என்றால் மது , சாராயம் இது எல்லாம் புனித நீரா? மதுவை தெருவுக்கு தெரு திறந்து வைத்திருக்கிற அரசு இதையெல்லாம் தடை செய்யுமா ? மதுவை திறந்து வைத்துவிட்டு குட்கா , பான்பராக் தடை செய்கிறது பைத்தியக்காரத்தனமாக தான் இருக்கின்றது. அரசின் ஆதரவு இல்லாமல் இந்த மாதிரி பொருட்களை விற்க முடியுமா ?

என்று கேள்வி எழுப்பிய சீமான் , சாலையில் போற வர்றவங்கல எல்லாம் புதிய வாகன சட்டத்தில் பிடிச்சுகிட்டு ஆயிரம் , இரண்டாயிரம் ,  மூவாயிரம்  என்று வசூல் செய்யுறாங்க. தலைக்கவசம் போடு என்று சைக்கிள்ல போறவன புடிச்சிருக்குது காவல்துறை அவ்வளவு தீவிரமாக  இருக்கின்றவர்கள் நெனைச்சா புடிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |