‘ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலக போகிறீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆல்யா மானசா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ”ராஜா ராணி 2 சீரியலிலிருந்து நீங்கள் விலக போகிறீர்களா? ” என கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லவே இல்லை என பதிலளித்துள்ளார் ஆலியா மானசா.