Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறாரா…….? ரசிகர்கள் வாழ்த்துக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி பதில்…….!!!

அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை என ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

கர்ப்பமாக இருக்கிறாரா அனிதா சம்பத்?? குவிந்த வாழ்த்துக்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி பதில்

அந்த வகையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போல தன்னுடைய கணவருடன் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, அதற்கு அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை என பதிலளித்துள்ளார். மேலும், அந்த வீடியோ வெறும் ரீல்ஸ் தான் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |