Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு சூரியன் தூரம் செல்கிறதா?.. இது முற்றிலும் பொய்…. அறிவியலாளரின் விளக்கம்…!!!

சமீப நாட்களாக சூரியனை விட்டு பூமி அதிக தொலைவிற்கு செல்லும், அதனால் அதிக குளிர் ஏற்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்று அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

சமீப நாட்களாக இணையதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது இன்னும் சில நாட்களில் பூமி சூரியனை விட வெகு தூரத்திற்கு சென்று விடும் என்றும் அதனால் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையேயான தூரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது அதனால் அதிகமான குளிர் ஏற்படும் என்ற தகவல் பொய்யானது.

ஆண்டுதோறும் நீள்வட்ட பாதையில், சூரியனை பூமி சுற்றி வரும் போது ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிகவும் அருகில் வரும். அதற்கு மற்றொரு காலத்தில் சூரியனிலிருந்து தூரத்தில் செல்லும். அதற்கு அப்ஹீலியன் என்று பெயர். ஜூலை மாதத்தில் தான் இந்த நிகழ்வு ஏற்படும். அப்போது பூமி ஏறக்குறைய 152 மில்லியன் கிலோமீட்டர் சூரியனிலிருந்து தூரமாக இருக்கும்.

ஆனால், இந்த நிகழ்வுகளினால் பூமியின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது இந்த நிகழ்வின் போது பூமியை விட்டு சூரியன் தூரமாக செல்கிறது. எனவே அதிக குளிர் ஏற்படும் என்று யாரோ யோசித்து இருக்கிறார்கள். அதனால் குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்று சிந்தித்து தானாகவே போலியாக செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில், அப்ஹீலியன் என்னும் நிகழ்வை அலிபென் என்று தவறாக பெயரிட்டு சிலர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் பொய் என்று கூறியிருக்கிறார். உண்மை அறிவியல் மட்டும் தான் மக்களிடம் சென்று சேர வேண்டும். மாறாக போலியான தகவல்களை சென்று சேர்ப்பது தவறு என்றும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |