Categories
உலக செய்திகள்

சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? – இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை…

இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இன்று நடைபெற்ற முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவைக் கோபப்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் சீனாவுக்கு மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையில் சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே அதிகரித்துவருகிறது. பல இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

பேடிஎம்

பிரபல வாலெட் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மாவுக்கு சொந்தமான அலிபாபா நிறுவனம் 400 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.

India-China faceoff

சொமேட்டோ

சொமேட்டோ நிறுவத்திலும் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தைத் தவிர அலிபே சிங்கப்பூர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் ஆண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் குரூப், ஷன்வே கேபிடா உள்ளிட்ட சீன நிறுவனங்களும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவில் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் சொமேட்டோவில் 200 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

ஸ்விக்கி

சீனாவின் மீட்டுவான் டயான்பிங் (Meituan Dianping), ஹில்ஹவுஸ் கேபிடல், டென்சென்ட் ஹோல்டிங்ஸ், எஸ்ஐஎஃப் பார்ட்னர் (SAIF Partner) ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

ஓலா

சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ், ஸ்டெட்வியூ கேபிடல் (Steadview Capital), செய்லிங் கேபிடல் (Sailing Capital), எடர்னல் யீல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட், சீனா-யூரேசிய பொருளாதார ஒத்துழைப்பு நிதியம் ஆகியவை ஆன்லைன் கார் முன்பதிவு நிறுவனமான ஓலாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

பைஜூஸ்

சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜுஸ் நிறுவனத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

India-China faceoff

பிக் பாஸ்கெட்

சீனாவின் அலிபாபா குழுமமும் TR Capital நிறுவனமும் ஆன்லைன் மளிகை தளமான பிக் பாஸ்கெட்டில் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

ஸ்னாப்டீல்

சீனாவின் அலிபாபா குழுமம் மற்றும் எஃப்ஐஎச் மொபைல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஸ்னாப்டீலில் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

ஓயோ

சீன நிறுவனமான திதி சக்ஸிங்(Didi Chuxing), சீனா லாட்ஜிங் குழுமம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஓயோவில் முதலீடு செய்துள்ளன.

India-China faceoff

இதுதவிர உதான், கட்டபுக் ஆப், ஹைக், ட்ரீம் 11, மேக் மை ட்ரிப், பேடிஎம் மால், க்விக்கர், ஷேர் சேட், லென்ஸ்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் சீன நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளன.

Categories

Tech |