இன்றைய நவீன காலத்தில் நாம் உண்ணும் சீரற்ற உணவு முறையால் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினை தான் மலச்சிக்கல் பிரச்னை. தினசரி ஏற்படும் மலச்சிக்கல் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதற்கு நம் முன்னோர்கள் கூறிய எளிய வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை காண்போம்.
மன அழுத்தம், உடலுக்கு போதுமான நீர் அருந்தாது, அதிகமான பால் பொருட்கள் உண்ணுதல், கால்சியம் மற்றும் அலுமினியம் கலந்த ஆன்டி ஆசிட் மருந்துகள், மலம் வெளியேறுவதை அடக்குதல் இது போன்ற பிரச்சினைகளால் நீங்கள் ரத்தத்துடன் மலம் கழித்தல் ஏற்படும்.
மலச்சிக்கல்:
மலச்சிக்கல் என்பது மலம் கழித்தலை சிரமத்திற்கு உள்ளாக்கி வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது. மலம் கழித்தலுக்கான நேரம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 3 நாட்களுக்கு ஒரு முறை என மலம் கழிப்பது அவ்வளவு நல்லது அல்ல. 3 நாட்களுக்கு பிறகு மலமானது ரொம்ப இறுக்கமாகவும் வெளியேற கஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும்.
அடிப்படைக் காரணம்:
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
அறிகுறிகள்:
மலம் கழிக்க சிரமம், வறண்ட மலம் கழித்தல், வலியுடன் மலம் வெளியேறுதல், உலர் மலம், சிறுது சிறுதாக வெளியேறுதல், இறுக்கமான மலம், மலம் கழிக்காமல் இருத்தல், தொடர்ச்சியற்ற முறையில் மலம் கழித்தல், அதிக அழுத்தம் கொடுத்தல், அடிவயிற்றில் வலி, வயிறு வீக்கம், வாந்தி, குமட்டல், எடை இழப்பு, சோர்வு, வயிற்றுப் போக்கு.
லெமன் ஜூஸ்:
ஒரு கப் சூடான தண்ணீரில் கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து குடித்தால் போதும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 2 முறை என எடுத்து வந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் இல்லாமல் இதை எடுத்துக் கொள்ளும் போது சரியான அளவில் எடுத்துக் கொள்ளுவது அவசியம்.
காபி:
காபி ஒரு டையூரிடிக் பானம். காபி உடனடியாக உங்கள் குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி மலம் வெளியேறுவதை அவசரப்படுத்தும். மேலும் குடலிலுள்ள தசைகளை இயக்கி மலத்தை ஈஸியாக தள்ளி விடும். எனவே இதை சரியான அளவில் தினசரி எடுத்து வந்தால் நல்லது.
உலர்ந்த திராட்சை:
உலர்ந்த திராட்சையில் நார்ச்சத்து மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. இது மல மிளக்கியாக செயல்படுகிறது. எனவே தினசரி கொஞ்சம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மேலும் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இஞ்சி அல்லது புதினா டீ:
புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது. மேலும் பசியை தூண்டுதல், சீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல்.
நார்ச்சத்து
நார்சத்து குடலை சுத்தப்படுத்தும், உணவுப் பொருட்களை அரைக்கும், குடலிலுள்ள தேவையில்லாத கசடுகளை நீரில் அலசி வெளியேற்றி விடும். நார்ச்சத்தும் நீரும் கலந்தது ஒரு ஸ்பான்ஞ் மாதிரி செயல்பட்டு குடலிலுள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி விடும். நீரில் கரையாத நார்ச்சத்துகள் தண்ணீரை உறிஞ்சாமல் அப்படியே இருக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
கருப்பட்டி
கருப்பட்டியை நீங்கள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நாள்பட்ட அல்லது அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்க வல்லது. ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு முன் குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும். இது இயற்கையானது மேலும் ரெம்ப சுவையான இனிப்பும் கூட.
எள் விதைகள்
எள் விதைகளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் குடலுக்கு போதுமான ஈரச்சத்தை கொடுத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த எள் விதைகளை சாலட், செரல்ஸ் அல்லது உணவுகளில் சேர்த்து வந்தாலே போதும் பயன் பெறலாம்.
பச்சை ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள் 2 பச்சை ஆப்பிள்கள் 3 கிவி பழங்கள் கொஞ்சம் லெமன் ஜூஸ் பயன்படுத்தும் முறை மேற்கண்ட பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கி பருகுங்கள். மலச்சிக்கலை துரத்தி விடலாம். நாம் மேற்கொள்ளும் தவறான உணவுப் பழக்கம் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகும்.