வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வேலைவாய்ப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்பு கொடுமைகளில் மக்கள் சிக்கித் திணறிக் கொண்டு இருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கம் கொடுத்து விட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், அரசு கமிஷன் அடிக்க உதவும் டெண்டர்கள் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதார மீட்புக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. ரங்கராஜன் தலைமையில் குழு அறிக்கையை அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது, ஆனால் அறிக்கையை வெளியிடுவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
அரசின் தோல்வி திசை திருப்பவே புத்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன. இனியும் ஏமாற்றாமல் கிராமப்புறத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை பெற உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். பிரத்யேகமாக ஒரு ”நகர வேலைவாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்க வேண்டும். சாலை ஓரத்திலே வேலையை அற்றவர்கள், வேலை அவர்களின் மனதிலே விபரீதமான எண்ணங்கள். இது இதுதான் காலத்தின் குறி என்று பேரறிஞர் அண்ணா என்று சொன்னதை மறந்து விடக்கூடாது என்று முக ஸ்டாலின் தந்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.