கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பல நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கொரோனாவுக்கு அச்சம் இருக்கிறதா ? இல்லையா ? என்பது குறித்து கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.இதில் பிரிட்டன் கடைசி இடத்தை பெற்றுள்ளது.
பிரிட்டன் நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டு அச்சம் அடையவில்லை , அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வெறும் 5 சதவீதம் மக்கள் மட்டுமே கொரோனா வைரசுக்கு பயப்படுவதாகவும் , 19 சதவீதம் பேர் சற்று பயப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் மற்ற நாடுகளை விட மிக மிக குறைவாக உள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள 44 சதவீத மக்கள் கொரோனா வைரஸ் பற்றி மிகமிக அதிகளவில் பயப்படவில்லை. 26 சதவீதம் மக்கள் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதில் இந்தோனேஷியா 81 சதவீத மக்கள் பயத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தோனேசியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எந்த மரணமும் நிகழவில்லை. சீனாவில் கோரோனாவால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு , 3000 பேர் மரணமடைந்திருந்தாலும் இந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் சீனாவுக்கு 6ஆவது இடம் கிடைத்துள்ளது. சீன மக்கள் வெறும் 26 சதவீதம் பேர் தான் கொரோனா வைரசை கண்டு பயப்படுகின்றனர். 40 சதவீத மக்கள் ஓரளவு பயப்படுகின்றனர் என ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கண்டு அதிகம் பயப்படும் நாடுகள் விபரம் :
-
இந்தோனேசியா
-
மலேசியா
-
பிலிப்பைன்ஸ்
-
ஹாங்காங்
-
தாய்லாந்து
-
சீனா
-
தைவான்
-
சிங்கப்பூர்
-
அமெரிக்கா
-
பிரிட்டன்