Categories
உலக செய்திகள்

நாய், பூனை மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல் …!!

செல்ல பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தோற்று பரவுமா? பரவாதா? என்பது பற்றிய தொகுப்பு

நியூயார்க் நகரில் பெண்புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அச்செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவி செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தது. வைரலாக தகவல் பரவி வந்தது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் செல்லப் பிராணிகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்று ஏற்படுவது உறுதி செய்யப்படவில்லை.

இருந்தாலும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா பரவ ஆரம்பித்த தொடக்கத்தில் செல்லப் பிராணிகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு தொற்றுகிறது என்று நினைத்த சீனர்கள் கொத்துக் கொத்தாக செல்லப்பிராணிகளை கொன்று குவித்ததாக தகவல் வந்தது.

இதுவரை அவ்வாறு எந்த செய்தியும் நிரூபிக்கப்படாத காரணத்தினால் செல்ல பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவியது எனும் தகவலை சுகாதார மையம் திரும்பப் பெற்றது. அதனைத் தொடர்ந்து செல்ல பிராணிகளிடம் இருந்து தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பது நிரூபிக்கப் படவில்லை என்பதே உண்மை.

போலி செய்திகளை பரப்புவதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். சில நேரம் போலி செய்திகள் பல உயிர்களை கொள்ளும் செயலையும் செய்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டு சீனாவில் கொன்று குவிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்.

Categories

Tech |