தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா இதுகுறித்து கூறுகையில், டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா? தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை இப்போது திறக்க வேண்டிய அவசியம் என்ன ? அரசின் தேவைக்காக மதுக்கடைகளை மூடுவதும், பின்னர் திறப்பதும் நிச்சயம் பிரச்சனையை உண்டாக்கும். டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கப் போகிறது என்று அரசு மதுக்கடை திறந்ததற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.