Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரப்ப டெல்லி போறீங்களா ? ராகுலுக்கு பாஜக எம்.பி கேள்வி ….!!

ராகுல் காந்தி கொரோனா சோதனை மேற்கொண்டாரா ? அல்லது கொரோனா வைரஸ் பரப்ப டெல்லி செல்கிறாரா ? என்று பாஜக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.3ஆவது நாளாக இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

இதனை ஏற்பட்ட அமளியால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சினையை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். அங்கும் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 3 நாட்களுமே அவை ஒத்திவைக்கப்பட்ட்து.

இந்நிலையில் வன்முறை நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் டெல்லியில் வன்முறையால் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி கூறும்போது , நீங்கள் டெல்லிக்கு செல்வதற்கு முன் நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன் .  கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் நீங்கள் இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ளீர்கள். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை எடுத்து கொண்டீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துள்ளீர்களா? இல்லை கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு செல்கிறீர்களா? என்று கேள்வி  எழுப்பி உள்ளார்.

Categories

Tech |