சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா? என்பதை நாளைக்குள் தெரிவிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி ஊரடங்கு உத்தரவானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இன்றுவரை ஐந்தாவது கட்டமாக அது அமுலில் இருந்தபோதிலும், ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட தொடங்கினர். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், ஊரடங்கை கடுமையாக்கி விட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களை இப்படி நடமாட விடுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று சென்னையில் முழு ஊரடங்கை அமல் படுத்த கோரி மனு அளிக்கப் பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தீவிரபடுத்தப்படுமா? முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா ? என்பதை நாளைக்குள் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டது. மேலும் தற்போது இருக்கும் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற மக்களின் கேள்விக்கு நாளைக்குள் சரியான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.