இதைப் போன்ற நிலைமை வந்தால், கண்டிப்பாக உறவு சார்ந்த சிக்கல்களை அணுகும் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நன்று. இது இருவருக்கும் நன்மை பயக்கும். உண்மை வெளிக்கொணரவும் உறுதுணையாக இருக்கும்.
தன் காதலனோ, கணவனோ தன்னைத் தவிர வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் பிடிக்காது. ஆனால், சில நேரங்களில் இதைப் போன்ற விஷயங்கள் கண் முன் நடந்தாலும் தெரியாமலேயே இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைகைகள், அவர் உங்கள் மீது ஆர்வம் இல்லை என்பதை உணர்த்துபவை. ஆனால், இதனால் அவர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டு உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம் இல்லை.
1. ஸ்மார்ட் போன் பயன்படுத்துதளில் மாற்றம்:
போனை தன் கண் பார்வையிலேயே வைத்திருப்பார்
புது போன் வாங்கி, அது வேலைக்கு மட்டும் என்று கூறூவார்
கடவுச்சொல் மூலம் போனை லாக் செய்து வைப்பார். அதை உங்களிடம் என்ன என்று சொல்லமாட்டார்.
பாத்ரூமுக்கு போனை எடுத்துச் சென்று வெகு நேரம் இருப்பார்
போன் வந்தாலே அறையிலிருந்து வெளியேறிவிடுவார்
ஒரு மெஸேஜ் வந்தாலும், முந்திக் கொண்டு போனை எடுப்பார்
காரில் போனை மறந்து வைத்துவிட்டதாக சொல்லுவார்
2. வாழ்க்கை முறையில் திடீர் மாற்றம்:
புதிய ஆடைகளை வாங்கி குவிப்பார்
நன்றாக சிகை அலங்காரம் செய்து கொண்டு மிடுக்குடன் இருப்பார்
புதிய உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பார்
அவர் இசை கேட்பதில் மாற்றம் இருக்கும்
அவர் சாப்பிடும் விதம் மற்றும் உணவுகள் மாறும்
3.வேலை செய்வதில் திடீர் மாற்றம்:
வெகு நேரம் அலுவலகத்தில் வேலை பார்ப்பார்
காலையில் சீக்கிரமே வேலைபக்குச் செல்வார்
வேலை சம்பந்தமாக அடிக்கடி பயணம் செய்வார்
வேலை செய்பவர்களுடன் அடிக்கடி மது அருந்துவதாக காரணம் சொல்வார்
4.நடத்தையில் தெரியும் திடீர் மாற்றம்:
உங்களின் தனிப்பட்ட லட்சியங்களுக்கு அதிக ஆதரவு கொடுத்து உற்சாகம் ஊட்டுவர்
எந்தவொரு காரணமுமின்றி உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வாங்கித் தருவார்
உங்களை அன்போடு அரவணைப்பதில் தயக்கம் காட்டுவார்
தள்ளி இருக்க, வேண்டுமென்றே பிரச்னைகள் கிளப்புவார்
5.உடலுறவில் திடீர் மாற்றம்:
படுக்கையில் அன்பே இல்லாதது போல் நடந்து கொள்வார்
அப்படி இல்லையென்றால் அதீத உடலறுவுக்குக் கட்டாயப்படுத்துவார்
பற்பல புதிய விஷயங்களை உடலுறவில் முயற்சி செய்யலாம் என்று கூறுவார்
6. பணம் செலவிடுதலில் திடீர் ஏற்றம்:
அதிகமான போன் பில்
அதிகமான கிரெடிட் கார்டு பில்
தனிப்பட்ட முறையில் வெளியே சென்று சாப்பிடுவது அதிகரிக்கும்
7. உணர்வுகளில் ஏற்படும் திடீர் மாற்றம்:
அவரின் நடத்தையில் மாற்றம் இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, அதை எடுத்துச் சொன்னால், அவருக்கு அதிக கோபம் வரும். குற்றச் சாட்டுகளை முன் வைத்தால், அன்பாக அரவணைக்காமல், `பைத்தியம் மாதிரி பேசாத’, `உன்ன டாக்டர் கிட்ட கொண்டு போகணும்’ என்ற அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவார். தப்பை சுட்டிக்காட்டினால், உங்கள் பயங்களுக்கு சரியாக பதில் சொல்லாமல், காயப்படுத்துவதன் மூலம் தப்பிக்கப் பார்ப்பார்.
இதைப் போன்ற நிலைமை வந்தால், கண்டிப்பாக உறவு சார்ந்த சிக்கல்களை அணுகும் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நன்று. இது இருவருக்கும் நன்மை பயக்கும். உண்மை வெளிக்கொணரவும் உறுதுணையாக இருக்கும்.