பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார்.
இந்த கதையை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இவர் அதர்வா-தி-ஆர்ஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை எழுதியவர். இந்நிலையில் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. பல்வேறு விதமான கதை அம்சங்களை கொண்ட படங்களை தயாரிக்கவும் டோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனமானது தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோனி தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், மாளவிகா மோகன் ஹீரோயின் ஆகவும் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.