Categories
தேசிய செய்திகள்

“புதிய வரைபடம்” ஐநா விதிமுறையை மீறியதா இந்தியா…?? பாகிஸ்தான் கடும் கண்டனம்….!!

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய இந்தியவரைபடம் வெளியிடப்பட்டதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Image result for இந்தியா புதிய வரைபடம்

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃசி  ஜம்மு காஷ்மீர் ஆகிய பாகிஸ்தான் பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் இந்த வரைபடம் தவறாக உள்ளது என்று கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை இந்திய அப்பட்டமாக மீறி உள்ளதாகும் குற்றம் சாட்டியுள்ளது.

Categories

Tech |