Categories
உலக செய்திகள்

“கொரோனா தாக்கம்” இது தான் காரணமா…? இல்லை வேற எதுவுமா….? மீண்டும் ஆராய்ச்சி….!!

கொரோனா  வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

கோவிட் – 19 என்கின்ற கொரோனா  வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் எந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட சமயத்தில்  வௌவாலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக கூறி வௌவாலில் இருந்து தான் பரவியது என்பதை ஒரு கணிப்பாக தெரிவித்தனர்.

ஆனால் இது வௌவாலிடமிருந்து தான் மனிதனுக்கு நேரடியாக பரவியதா ? அல்லது வௌவாலிடமிருந்து வேறு விலங்குக்கு பரவி அந்த விலங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவியதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது குறித்த ஆராய்ச்சியை  அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன.

Categories

Tech |