வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இதை காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள், காய்கறிகள், மருத்துப்பொருட்கள் போன்ற கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. மேலும் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 2ம் கட்டமாக தொடங்கி மே 3ம் தேதி வரை அமலில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இதன் காரணமாக, தமிழகம் அல்லாது இந்தியா முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அத்தியாவசிய கடைகளோடு வீட்டு உபயோக பொருட்களை விற்கும் கடை மற்றும் சர்வீஸ் சென்டர்களை திறக்கக் கோரி மனு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து மே 25ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.