திமுகவின் முக்கியமான மாநில பொறுப்பாளர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி பாஜகவின் மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் திமுகவில் எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக விபி துரைசாமி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.